அதிபர் போட்டி பரீட்சையில் கையடக்க தொலைபேசிகளுடன் தோற்றியிருந்த மூன்று பரீட்சாத்திகள்…

மூன்றாம் தர அதிபர் தொடர்பில் நேற்று(10) இடம்பெற்ற போட்டி பரீட்சையில் கையடக்க தொலைபேசிகளுடன் தோற்றியிருந்த மூன்று பரீட்சாத்திகள் சம்பந்தமாக பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

புத்தளம் பாத்திமா பெண்கள் பாடசாலை பரீட்சை நிலையத்தில் பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்னர் குறித்த மூவரிடமிருந்தும் கையடக்க தொலைபேசிகளை பரீட்சைகள் திணைக்களத்தின் கண்காணிப்பு குழு மீட்டுள்ளது.

அனைத்து பரீட்சாத்திகளுக்கும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலும் பரீட்சை தொடர்பில் அனைத்து விதிகளும் அறிவுறுத்தப்பட்டிருந்ததோடு, கையடக்க தொலைபேசிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளாவிய ரீதியில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டி பரீட்சையில் புத்தளம் மாவட்டத்தில் சுமார் 500 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.