அதிமுகவின் பிரதான தொலைக்காட்சி அலைவரிசையான ஜெயா டிவிக்கு மூடு விழா…

தமிழ் சேனல்களில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றானதும், அதிமுகவின் பிரதான தொலைக்காட்சி அலைவரிசையும், ஜெயா டிவியின் சில சேனல்களும் மார்ச் 11ம் திகதி முதல் துண்டிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து நேயர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில், ஜெயா டிவி (எச்டி), ஜெயா மேக்ஸ், ஜெயா பிளஸ் மற்றும் ஜெ மூவி போன்ற சேனல்கள் துண்டிக்கப்படும் என மாவிஸ் சாட்காம் நிறுவனம் இன்று(18) தினசரி நாளிதழ் ஒன்றில் பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.