அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான ரீட் மனு இன்று ஆராய்வு..

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானித்து, அண்மையில் வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அதிகாரமற்றதாகக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

06 உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த வாக்காளர் குழுவால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த இந்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று(16) ஆராயப்படவுள்ளது.

கொழும்பு, கண்டி, ஹாலிஎல, மாத்தறை மற்றும் எம்பிலிபிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேரால், குறித்த இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதியரசர்களான எல்.டி.பீ. தெஹிதெனிய, குமுதினி விக்ரமசிங்ஹ மற்றும் சிறிலால் குணரத்ன ஆகியோர் முன்னிலையில், நேற்று(15) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 

#rizmira