அதிவேகப் பாதையில் அம்பியுலன்ஸ்களுக்கு இலவசமாகப் பயணிக்கும் அனுமதியை வழங்கும் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று(07) புத்தளம் மருத்துவமனை ஊழியர்களுடனான சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஆபத்தான கட்டங்களில் உள்ள நோயாளிகளை கொழும்புக்கு கொண்டு செல்லும் அவசர தருணங்களில் அதிவேகப் பாதை வழியாக அம்பியுலன்ஸை எடுத்துச் செல்வதாயின் அம்பியுலன்ஸில் செல்லும் சுகாதாரப் பணியாளர்களே அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளதாக புத்தளம் மருத்துவமனை ஊழியர்கள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, அதிவேகப் பாதைகளில் அம்பியுலன்ஸ் வண்டிகள் இலவசமாக செல்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அமைச்சரவைப் பத்திரமொன்றின் ஊடாக அனுமதியைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.
(rizmira)