அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(26) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை நோக்கி பயணித்த வேன் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக அருகில் இருந்த கம்பத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் குழந்தைகள் மூவர் குறித்த குறித்த வேனில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத.
விபத்தில் காயமடைந்தவர்களை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் உயிரிழந்துள்ளதுடன் 14 வயதுடைய பெண் பிள்ளை ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹொரண வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கெலனிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.