அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…

(FASTNEWS|COLOMBO) புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

அதிவேக நெடுஞ்சாலைகளில் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரையிலான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதுடன், பண்டிகைக் காலத்தில் நாளொன்றிற்கு ஒரு லட்சத்து ஐயாயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் வரையிலான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதாக அதிவேக நெடுஞ்சாலை முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார்

இந்நிலையில், வாகனங்கள் உள்நுழைதல் மற்றும் வெளிச் செல்வதற்கான மேலதிக வாயில்களும் திறக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக ஊழியர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.