இன்று மாலை 6 மணி முதல் மூடப்படவுள்ளது [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் உள்ள அனைத்து அதிவேக வீதிகளும் இன்று(20) மாலை 6 மணி முதல் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே இன்று(20) மாலை 4 மணிக்கு அதிவேக  பாதைகள் மூடப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் அதிவேக பாதைகளில், பயணிப்பதற்கு, அனுமதி வழங்கப்படும் என செடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

 

____________________ [UPDATE]

அதிவேக வீதிகளுக்கும் பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(20) பிற்பகல் 4.00 மணி தொடக்கம் அனைத்து அதிவேக வீதிகளும் மூடப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அதுலுவகே தெரிவித்துள்ளார்.