மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் கேட்டுள்ளனர்.
மழையுடனான வானிலை நிலவுகின்றபோது வேகமாக வாகனத்தை செலுத்துவதை தவிர்க்குமாரும், வாகனங்களை செலுத்தும்போது முன் விளக்குகளை ஔிரவிடுமாறும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை நுவரெலியா மற்றும் பதுளை பிரதேசங்களில் நிலவும் அதிக பனிமூட்ட காலநிலை காரணமாக சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிசார் கோரியுள்ளனர்.