அதிவேக வீதியில் செல்லும் வாகனங்களை சோதனைக்குட்படுத்த நடவடிக்கை…

அதிவேக வீதிகளுக்குள் உட்பிரவேசிக்கும் வாகனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்னர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களின் தரம், சமிக்ஞை மற்றும் மின்குழிழ்கள் சரியான முறையில் செயற்படுகின்றமை, வேகக்கட்டுப்பாடு, கண்ணாடிகள், டயர் மற்றும் ஆசன பட்டி போன்ற முக்கியமான விடயங்கள் தொடர்பில் கண்காணிக்கவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துக் கண்காணிப்பாளர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

அதிவேக வீதிகளில் அனுமதி நிலையங்களுக்கு மேலதிகமாக பொலிஸார் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துக் கண்காணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிவேக வீதிகளில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்படும் சேதங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு எதுவும் நேர்ந்தால் 1969 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என பொலிஸ் போக்குவரத்துக் கண்காணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.