அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளிடம் வேண்டுகோள்..

வேக கட்டுப்பாட்டை மீறாமல் அதிவேக வீதியில் பேருந்துகளை செலுத்துமாறு நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 7ம் திகதி தொடக்கம் அதிவேக வீதிகளில் 4 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில் , குறித்த விபத்துக்களுக்கு காரணம் சொகுசு பயணிகள் பேரூந்துகளாகும் என அவர் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார்

(rizmira)