அதிஷ்ட இலாபச் சீட்டுக்களின் (லொத்தர்) விலையை 20 ரூபாயாகவே வைத்திருக்குமாறும், அதிகரிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தத் தகவலை, அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அண்மையில் அதிஷ்ட இலாபச் சீட்டுக்களின் விலையை 30 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக வௌியான தகவல்களை அடுத்து, இந்த விலை அதிகரிப்புக்கு எதிராக லொத்தர் விற்பனை முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.