அநுர சேனாநாயக்கவை சந்திக்க மஹிந்தவின் வழக்கறிஞர்கள் சிறைச்சாலையில்

தாஜூடீன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வழக்கறிஞர் ஊடாக, அநுர சேனாநாயக்கவுக்கு தகவல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

அநுர சேனாநாயக்கவை சந்தித்து மஹிந்தவின் வழக்கறிஞர், அநுரவின் வழக்கிற்காக எவ்வளவு என்றாலும் செலவிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் கொலைகள் குறித்து தகவல் வெளியிடாமல், பொறுமையாக இருக்குமாறும் கேட்டுள்ளார்.

அநுர சேனாநாயக்கவினால் உண்மைகள் வெளிப்படுத்தப்படும் பட்சத்தில் மஹிந்த குடும்பத்தினர் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் மஹிந்தவினால் முன்வைத்த கோரிக்கைக்கு அநுர சேனாநாயக்க சாதகமான பதிலை வழங்கவில்லை என சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.