அநுர திசாநாயக்கவே ஜனாதிபதி – ரணிலின் புதிய துரும்பு

(FASTGOSSIP | COLOMBO) – மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ள அநுர குமார திசாநாயக்கவை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான முன்னணியின் போது வேட்பாளராக நியமிக்க ஆதரவு வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட கருத்தினை முன்வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நெருங்கிய தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, 2015ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்த அனைத்து சக்திகளும் இன்றும் விருட்சகமாக உள்ள நிலையில் கடந்த 2015ம் ஆண்டு நல்லாட்சிக்காக உழைத்த அனைவரும் இம்முறையும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதே பிரதமரின் நிலைப்பாடு என தெரிவிக்கப்படுகின்றது.