அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள பாடசாலை மாணவர்களுக்கு அனைத்து வித கல்விக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட பொதியொன்றினை (பெக்கேஜ்) வழங்க உள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று(01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அதன்படி, குறித்த பொதியில் பாடசாலை சீருடை, காலணிகள் மற்றும் புத்தகங்கள் அனைத்தும் உள்ளடங்குவதாக மேலும் அவர் தெரிவித்திருந்தார்.