அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு சலுகை அடிப்படையில் கடன் வழங்க நடவடிக்கை…

இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறிய வியாபாரிகளுக்கு இரண்டு அல்லது மூன்று லட்சம் ரூபாய் வரை நிவாரண உதவியும், அதற்கு மேலதிகமான பாதிப்புகளுக்குள்ளான வர்த்தகர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று(27) இடம்பெற்ற அனர்த்த நிவாரண மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடலிலேயே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறித்த இந்தத் தகவலை வெளியிட்டார்.

 

(rizmira)