அனர்த்தம் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு நட்டஈடு..

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு 2.5 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஒர் உயிரிழப்புக்கு தலா ஒரு லட்சம் ரூபா என்ற அடிப்படையில் நட்டஈடு வழங்கப்படும் எனவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை அனர்த்தம் காரணமாக வர்த்தக நிலையங்கள் மற்றும், தொழில் முயற்சிகளுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்ய 2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்தம் காரணமாக 1,402 வீடுகள் முற்று முழுதாக அழிவடைந்துள்ளதாகவும் மேலும் சுமார் 7,000 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(rizmira)