அனர்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படகுகளுக்கு பொதுமக்கள் பணம் செலுத்த வேண்டாம்

அனர்த்த சேவை நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படகுகளுக்கு பொதுமக்கள் பணம் செலுத்த வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்பொழுது அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ள பகுதிகளுக்கு தனியார் படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. குறித்த சகல படகுகளுக்குமான கொடுப்பனவை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வழங்குகின்றது.

சிலர் படகுச் சேவைக்கு பணம் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுமக்கள் இந்த சேவைக்காக எந்தவொரு கட்டணத்தையும் கொடுக்க வேண்டாம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.