அனர்த்த நிலையில், அரச அதிகாரிகள் செவிசாய்க்காத நிலையில், தன்னை தொடர்பு கொள்ளவும் – ஜனாதிபதி…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறித்து அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் அரச அதிகாரிகளின் உதவி தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லையாயின் 1919 என்ற இலக்கத்தினூடாக உடனடியாக ஜனாதிபதிக்கு தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரச ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறித்த இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ள சகல மக்களுக்கும் துரித நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.