ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆளும் தரப்பின் நாடாளுமன்ற குழுவின் அவசர கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று(01) இடம்பெறவுள்ளது.
குறித்த இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு ஆளும் தரப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நீடிக்கும் அனர்த்த நிலைமை தொடர்பாக ஆராயும் நோக்கில் குறித்த இந்த அவசர கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகின்றது.