இலங்கையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சென்ற பிரபல சிங்கள பாடகரான சந்துன் பெரேரா விபத்துக்குள்ளாகியுள்ளார்.
சந்துன் பெரேரா பயணித்த மோட்டார் வாகனம் மற்றொரு மோட்டார் வாகனத்துடன் மோதியதினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பலியத்தலை பிரதேசத்தில் வைத்து குறித்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் சந்துனின் பாதங்களில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ள நிலையில் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
கடந்த 29ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
