அனிகாவை அச்சுறுத்திய விவகாரம் குறித்த ஷனிலின் மனு 28இல் விசாரணைக்கு…

தன்னைக் கைது செய்வதைத் தவிர்க்குமாறு உத்தரவிடக் கோரி, வர்த்தகர் ஷனீல் நெத்திகுமார தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தினம் ஒதுக்கியுள்ளது.

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, சாட்சியமளித்ததாக கூறப்படும் அனிகா விஜேசூரிய என்ற பெண்ணை, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னைக் கைது செய்ய தயாராகி வருவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த மனுவை எதிர்வரும் 28ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தீர்மானித்துள்ளது.

 

####