அனிமேஷன் ஸ்டூடியோவில் தீ விபத்து – 24 பேர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) – ஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் நாட்டின் புகழ்ப்பெற்ற அனிமேஷன் ஸ்டூடியோக்களுள் ஒன்று கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ.

தீ பரவியதில் கட்டிடம் முழுவதும் எரிந்துள்ளது. இதில் உடல் கருகி 24 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படுகாயமடைந்தவர்களுள் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் ஒருவரை கைது செய்து விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.