(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் கலந்து கொண்டுள்ளார்.
கோத்தபாய தலைமையில் வியத்மக அமைப்பின் இளைஞர் மாநாடு நேற்று கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய முரளிதரன், நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமாகியுள்ளதன் காரணமாக, இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் முக்கியமானதொன்றென தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே தெரிவு செய்யப்படவேண்டும். எனவும், கிரிக்கெட் வீரர்களும், ஏனைய துறைசார் வல்லுநர்களும் நாட்டுக்குத் தலைமை தாங்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
முத்தையா முரளிதரன், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என குறிப்பிட்டுள்ளார்.