தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் பயணிகள் பேரூந்துகளுக்கான அபராதத் தொகை ரூபா.10,000 இரண்டு இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்திருந்தார்.