அனுமதிப் பத்திரம் இன்றி பயணிக்கும் தனியார் பயணிகள் பேரூந்துகளுக்கான தண்டப் பணத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து இரண்டு லட்சம் ரூபா வரையில் அதிகரிப்பதற்கான சட்டமூலத்துக்கு பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்துள்ளது.
வடக்கிலிருந்து தெற்கிற்கு வரும் அதிகமான பேருந்துகளே இவ்வாறு அனுமதிப் பத்திரம் இன்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் சட்டத்துக்கு முரணாக நடப்பதாகவும், இதன் காரணமாகவே குறித்த இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாகவும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.