உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி பராமரிக்கப்பட்டு வந்த மேலும் 13 யானைக்குட்டிகளை தாம் மீட்டுள்ள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் நேற்று கொழும்பு சிரேஸ்ட நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சில யானைக்குட்டிகள் தொடர்பில் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வனவிலங்கு பதிவுப் புத்தகத்தில் மாற்றங்களை செய்து இந்த ஆவணங்களை சிலர் வைத்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த யானைக்குட்டிகள் மீட்கப்பட்டு உடவளவை பரிமாற்ற நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக சீ.ஐ.டியினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் யானையை பராமரித்து வந்தால் குடும்பத்துக்கு நன்மை வரும் என்ற அடிப்படையிலேயே பலரும் யானைக்குட்டிகளை அனுமதி பத்திரங்களுடன் வீடுகளில் வளர்த்து வருகின்றனர்.
எனினும் மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் இது சட்டவிரோதமான வர்த்தகமாக மேற்கொள்ளப்பட்டு வந்தமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது