அனுராக் காஷ்யப் மீது Me too

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா ) – இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர், பிளாக் ஃபிரைடே, தேவ்.டி, தி லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல இந்தி படங்களை இயக்கியுள்ளார்.

சில படங்களில் நடித்தும் உள்ளார். தமிழில், அஜய் ஞானமுத்து இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இவர் மீது நடிகை பாயல் கோஷ், பாலியல் புகார் கூறி இருந்தார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாயல் கோஷ், சில தென்னிந்திய படங்களிலும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். அவர் கூறும்போது,

“..சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருந்தபோது ஓர் இயக்குனரை மும்பையில் அவர் வீட்டில் சந்தித்தேன். அவர் பலரை சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். சில நாட்கள் கழித்து அவர் வீட்டுக்குச் சென்றபோது, என்னை தனியறைக்கு அழைத்துச் சென்றார். கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றார். அங்கிருந்து தப்பி வந்தேன்..” என்று கூறியிருந்தார்.
இது அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது என்று மறுத்துள்ளார் இயக்குனர் அனுராக் காஷ்யப்.

“..என் முதல் மனைவி, இரண்டாவது மனைவி, என்னுடன் பணிபுரிந்த நடிகைகள், அல்லது பொதுவிலோ, தனிப்பட்ட முறையிலோ சந்திக்கும் பெண்கள் யாராக இருந்தாலும், இது போன்ற நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும் இல்லை அதை பொறுத்துக் கொள்வதும் இல்லை. உங்கள் வீடியோவை பார்க்கும்போது அதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் இருக்கிறது என்பது தெரிய வருகிறது..” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அனுராக்கிற்கு நடிகைகள் டாப்ஸி, ராதிகா ஆப்தே, சுர்வீன் சாவ்லா உள்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவருடைய முதல் மனைவி ஆர்த்தி பஜாஜும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, நீங்கள் ராக்ஸ்டார் அனுராக். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தை உருவாக்கவும் தொடர்ந்து குரல் கொடுங்கள்.

உலகம் தோல்வி அடைந்தவர்களால் இயங்குகிறது. மற்றவர்களை வெறுப்பதற்கு செலவிடும் சக்தியை ஆக்கப்பூர்வமாகச் செலவிட்டால், இந்த உலகம் சிறந்த இடமாக மாறும். இது மலிவான ஸ்டன்டாக இருக்கிறது. முதலில் இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பிறகு எனக்கு சிரிப்பு வந்ததாக தெரிவித்துள்ளார்.