(FASTNEWS|COLOMBO ) – மதவாச்சி – அனுராதபுரம் பிரதான வீதியின் வஹமளுகொள்ளேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்றும் தம்புள்ளை நோக்கி பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 53, 30 மற்றும் 12 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.