அனுராதா ஸ்ரீராமை அழ வைத்த வார்த்தை!

சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பாடகி அனுராதா ஸ்ரீராமும் தன்னால் முடிந்த உதவியை தங்கள் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு செய்து வருகிறார்.

இதுக்குறித்து அவர் கூறுகையில் ’மழை நிவாரணப் பணிகளுக்காக, பல்வேறு ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்தேன். ஒரு நாள் இரவு வேலை முடித்துக் களைத்துத் திரும்பினேன். எங்கள் வீட்டுக் காவலர், ‘யார் யாருக்கோ உதவுறீங்களே, எனக்கு ஒரு கொசுவலை கொடுங்கம்மா’ என்றார். எனக்கு அந்த தருணம் அழுகையே வந்துவிட்டது. எங்கெங்கோ சென்று உதவுகிறோம். ஏன் நாம் இருக்கும் இடத்துக்கு உதவக்கூடாது என்று தோன்றியது.

மேலும் சைதாப்பேட்டை, டி.நகர் பகுதிகளில் சுமார் 350 குடும்பங்கள் உள்ளது, அனைவருக்கும் உதவ முயற்சி செய்து வருகிறேன்’ என மிக நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.