அனுருந்த பொல்கம்பொலவிற்கு பிணை…

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுருந்த பொல்கம்பொலவிற்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது

5 இலட்சம் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க, கிளிநொச்சி நீதவான் ஏ.ஆனந்தராஜா இன்று(18) உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு புகையிரத பாதை நிர்மாண பணிகளில் ரூபா 8 மில்லியன் நிதி மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், அவர் கடந்த செவ்வாய்க்கிழமை(15) குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.