அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகரவை, 7,900 ரூபாய் காசுப் பிணை மற்றும் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான சரீரப் பிணையில் விடுவிக்க, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, சற்று முன்னர் உத்தரவிட்டார்.
நீதிமன்றக் கட்டளையையும் மீறி, பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டிலேயே, அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.