அனைத்து இலங்கை ரயில்வே பொது ஊழியர்கள் பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தம்…

புகையிரத உதவி சாரதிகள் சேவைக்கான ஒத்திவைக்கப்பட்ட பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான பொதுப் பரீட்சையினை விரைவில் நடாத்துமாறும் அவ்வாறு நடாத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின், நாடளாவிய ரீதியாக தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக அனைத்து இலங்கை ரயில்வே பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

2011ம் ஆண்டுக்கு பின்னர் ஊழியர்களை சேர்த்துக் கொள்ளாததால் குறித்த பதவி வெற்றிடங்கள் 300 இற்கும் அதிகமாக இருப்பதாக குறித்த சங்கத்தின் பிரதான செயலாளர் நேற்று(29) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

புகையிரத சேவையின் போது உத்தியோகபூர்வமாக நேரடி ஈடுபாடு கொண்டிருக்கும் உதவி சாரதி சேவையானது தற்போது பெரும் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றமையும், இது குறித்த நீதிமன்றத் தீர்ப்பினையும் குறித்த அதிகாரிகள் கவனத்திற் கொள்ளாது இருக்கின்றமை குறித்தும் அவர் மேலும் தெளிவுபடுத்தியிருந்தார்.

#rishma..