(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனக்கு எதிராக கடந்த ஐந்து வருடங்களில் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றதாக மாறியுள்ளதை உறுதியாக கூறிக்கொள்வதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பகுதியில் நேற்று(13) மாலை இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களிலும் தமக்கு எதிராக சிலர் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.