அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் முற்கொடுப்பனவு அட்டையை மீண்டும் அறிமுகம் செய்யவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கையை ஒரு மாத காலத்திற்குள் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
முற்கொடுப்பனவு அட்டையை வழங்குவதற்கு தற்போதைக்கு இரண்டு அரச வங்கிகள் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் கொழும்பின் பிரதான பாதைகள் பலவற்றில் இந்த அட்டை முறை பயன்படுத்தப்பட்ட வந்து போதும் சில பிரச்சினைகள் காரணமாக அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.