அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்…

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக சில நடிகைகள் கூறுவதில் பொய் இருக்காது, அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது:-

‘நான் ஹீரோயினாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. வடநாட்டு பெண்ணாக இருந்தாலும் என்னை தமிழ் பெண்ணாகத் தான் பார்க்கிறார்கள்.

நான் தைரியமானவள். எனக்கு என்னை காத்துக் கொள்ள தெரியும். எனக்கு கோபம் வந்தால் காளி மாதிரி ஆகிவிடுவேன். ஒரு முறை என் தோழியிடம் தவறாக நடக்க முயன்றவனின் சட்டை காலரை பிடித்து முகம் வீங்கும் அளவுக்கு அவனை அடித்தேன் என்று கூறியுள்ளார்.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக சில நடிகைகள் தெரிவித்துள்ளனர். அதில் பொய் இருக்காது.

ஆனால் என்னை யாரும் அப்படி அழைக்கவில்லை. அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்’ என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.