நாட்டில் உள்ள அனைத்து தேசிய பாடசாலைகளையும் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலையமாக செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதன்போது நிதி வழங்க வேண்டாம் என்று உதவி வழங்குபவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ள கல்வியமைச்சர் ஆடைகள் வழங்குவதாயின் புதிய ஆடைகளை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேவேளை பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆபத்தான கட்டிடங்களை அடையாளம் கண்டு வலயப் பணிப்பாளர்களிடம் தெரிவிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்படும் எனவும் அமைச்சர் இதன்போது கூறினார்.