அனைத்து தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தொலைபேசி கட்டணம், தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் இணைய சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிப்பதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு  அறிவித்துள்ளது.

இந்த கட்டண திருத்தம் செப்டம்பர் 5 முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.

நிலையான தொலைபேசிகள், கையடக்கத் தொலைபேசிகள், இணைய சேவைகளுக்கான கட்டணங்கள் 20% அதிகரிக்கப்படும்.

செய்திமதி தொழில்நுட்ப தொலைகாட்சி சேவைகள் மற்றும் கேபல் தொலைகாட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் 25% அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.