அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்ட அறுவருக்கும் பிணை..

அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் லஹிரு வீரசேகர மற்றும் தென்னே ஞானானந்த தேரர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் அறுவரையும், ஒருவருக்கு தலா 2500 ரூபா வீதம் பிணையில் செல்ல இன்று(31) கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2015 அக்டோபர் 6ம் திகதி பல்கலைக்கழக மானியக் குழு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு 2 லட்சத்து 84 ஆயிரம் ரூபாவுக்கு சேதம் விளைவித்தமைக்கு எதிராக குறித்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குறித்த வழக்கிற்கு சமூகமளிக்காது போனமையினால் கடந்த 19ம் திகதி மேற்குறித்தோருக்கு எதிராக பிடிவிறாந்து விடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த வழக்கு மீளவும் ஆகஸ்ட் 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

(rizmira)