அனைத்து மதுபான, இறைச்சி கடைகளுக்கு நாளை பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், விடுதிகள் மற்றும் இறைச்சி கடைகள் நாளை(25) மூடப்படும் எனத் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிக் கிரியைகள் காரணமாக குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.