அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைகழக வரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  உயர் தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைகழக வரத்தை வழங்குவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கலென்பிதுனுவெவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கல்விக்காக தான் பாரிய அளவில் முதலீடு செய்வதாகவும், உலகில் அதிகளவான நாடுகள் தொழிநுட்பத்தின் ஊடாக முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அது எங்களுக்கு சிறந்த உதாரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.