“அனைவரும் எதிர்பார்த்து நிற்கிறோம்” – அகில..

ஜனநாயகத்திற்காக முன்னிற்கும் அனைவரதும் எதிர்பார்ப்புக்களுக்கும் சாதகமான தீர்வொன்று கிடைக்கும் என நம்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

2015, அரசாங்கத்தினை தோற்றுவித்தது, நீதித்துறை உட்பட பெரும்பாலான பிரிவுகளில் சுயாதீனமான செயல்பாடுகள் இடம்பெறும் என்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையினை வைத்தே ஆகும்.

பாராளுமன்ற கலைப்பானது சட்ட விரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் தீர்ப்பானது இன்று(13) மாலை 04.00 மணிக்கு வெளியாகவுள்ளதாக உச்ச நீதிமன்ற பதிவு அலுவலகம் குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.