(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
தனிப்பட்ட ரீதியில் தான் எவ்வளவு இழந்தாலும் நாட்டின் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்காக அரசியலமைப்பிற்கு அமைய செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் மகா சங்கத்தினரிடம் ஆசி பெற்றுக் கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அத்தோடு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாட்டை மீட்டெடுக்க முடியும் என்பதில் தமக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் இக்கட்டான நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்று நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதில் வெற்றி பெற்றுள்ளார், மேலும் எதிர்நோக்கும் அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு தாங்கள் அவரை ஆசிர்வதிப்பதாக மகா சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதேவேளை, சர்வகட்சி ஆட்சிக்கு ஆதரவளிக்காத அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டுமென பேராசிரியர் கொட்டபிட்டியே ராகுல தேரர் சுட்டிக்காட்டினார்.