(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பொதுத்தேர்தலில் அன்னம் சின்னத்தில்கீழ் போட்டியிடுவதற்கு ரணில் மற்றும் சஜித் அணிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன.
சிறிகொத்தவில் உயர்மட்ட உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின்சின்னமாக அன்னத்தை ஏற்குமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு கூட்டணியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று மாலை அறிவித்துள்ளார்.