அன்று மௌனித்த மன்சூர் இன்று வாய்திறப்பது சமூக பக்தியன்று!
மன்சூரின் அறிக்கைக்கு இ.பா.உ அப்னான் காட்டம்..!!

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறையின் வட்டார பிரிப்பு விவகாரத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர்அதிகாரமிருந்த காலத்தில் கைவிரல்களை வாயில் வைத்துக்கொண்டிருந்ததை மறந்து தவிசாளர் நௌஷாட்டுக்குதுரோகி முத்திரை குத்த முனைகிறார். அதற்காக தவிசாளரையும் இது விடயத்தில் உத்தமர் என வியாக்கியானம் கூற முடியாது.
இவ்வாறு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவிசாளர் நௌசாட்டை சாடியிட்ட முகநூல் அறிக்கையை விலாசித்தள்ளியபோதே அப்னான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த 2013 ம் ஆண்டு கிழக்கு மாகாண சபையில் அதிகாரம் பொருந்திய பலம்பெற்ற கட்சிகளாக மு.கா. – த.தே.கூ ஆகியன மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் அக் காலப் பகுதியில் அதே அரசாங்கத்தில் பெரும் பலம் பொருந்திய அமைச்சராக அதாவது நீதியமைச்சராக ரவூப்ஹக்கீம் இருந்தார். அதே காலப் பகுதியில் மாகாண சபையில் அமைச்சராக இருந்த இதே முன்னாள் மன்சூர் எதைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அன்று நௌசாட்டின் முட்டாள்தனம் புரியாமல் இன்று வசைபாடுகிற விடயம் இவரது சுய அரசியலின் அசமந்தப்போக்கை அச்சொட்டாக வெளிக் காட்டுகின்றது. காரைதீவு, நாவிதென்வெளி, அட்டாளைச்சேனை போன்ற சம்மாந்துறையை விட பரப்பளவில் சிறிய ஊர்களுக்கானபிரதிநிதித்துவ ஒதுக்கீடுகளும், அவர்களுக்கான வட்டாரப் பங்கீடுகளையும் ஒப்பிடுகையில் நௌசாட் பாரியதுரோகம் இழைத்துள்ளார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இன்றைய நிலையில் சம்மாந்துறை பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட

வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம். ஆனாலும், காக்கை வடை பறித்த கதைபோல அன்று அன்னார்ந்து பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் இன்றுகுருட்டுத்தனத்தையும், சமூக ஏமாற்றத்தையும் பற்றி வசைபாடக்கூடாது.
அன்றே அதிகாரத்திலிருந்த நீங்கள் நெஞ்சை நிமிர்த்தி நௌசாட்டை எதிர்த்திருந்தால் இன்று வியாக்கியாணம்புரியத் தேவையில்லை.

எனவே, நௌசாட்டை இவ்விடத்தில் நியயப்படுத்த முடியாது. அதே வேளை சந்தர்ப்பத்திற்கு மாத்திரம் தலையைக்காட்டும் இவ்வாறானவர்களின் கருத்துக்களையும் ஏற்க முடியாது என்றார்.