அன்வர் இப்ராஹீமை விடுதலை செய்ய ஐ.நா.கோரிக்கை

மலேசிய எதிர்கட்சித் தலைவரான அன்வர் இப்ராஹிம் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியானவை எனக் கூறியுள்ள ஐ நா குழு அவரை விடுவிக்க கோரியுள்ளது.

மலேசிய எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் குதவழி உறவில் ஈடுபட்டார் எனக் கூறி தண்டிக்கப்பட்டுள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும்மென ஐ நா கூறுகிறது.

இன்னும், சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அன்வர் இப்ராஹிம் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என ஐ நா குழுவொன்று கோரியுள்ளது.

ஆண் உதவியாளர் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டார் எனக் கூறி, கடந்த பெப்ரவரி மாதம் அன்வர் இப்ராஹிமுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டது. எனினும், அவர் அக்குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறார்.

ஐ நா குழுவின் அறிக்கை தனது தந்தை மீது தவறில்லை என்பதை நிரூபித்துள்ளது என, அவரது மகள் நூருல் இசா அன்வர் பிபிசியிடம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசிய அரசு இந்த முடிவை ஏற்று அதன்படி நடக்க வேண்டும் எனவும் அன்வர் இப்ராஹிமின் மகள் வலியுறுத்தியுள்ளார்.