அபிவிருத்திக்கான உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை

அபிவிருத்திக்கான உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ம் அமர்வுகளில் அறிக்கையின் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அபிவிருத்தி ஊடாக கொள்கைகளின் ஊடாக இந்த அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுகாதாரம், கல்வி மற்றம் வறுமை ஒழிப்பு குறித்து நீண்ட காலமாக முதலீடுகள் செய்யப்பட்டு அபிவிருத்தி முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்திக்கான உரிமை குறித்த நாடுகளுக்கு இடையிலான உறவு வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளது. அபிவிருத்தி அடைந்த நாடுகளும் இதற்கு ஒத்துழைப்வு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. மிலேனிய இலக்குகளை எட்டுவதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது என இலங்கை தெரிவித்துள்ளது.