அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி உதவியினை தொடர்ந்தும் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.
அண்மையில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 51வது வருட கூட்டத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த போதே அவர் இந்த உறுதி மொழியை வழங்கினார்.
குறிப்பாக எதிர்வரும் ஐந்து வருட காலங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் சபையின் உறுப்பினரும் நிறைவேற்று இயக்குனருமான இன்-சங் சொங் தெரிவித்துள்ளார்.
வழங்கப்படும் இந்த நிதியின் ஊடாக மேலதிக வேலை, மக்களின் வருமானம், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, அறிவினை விருத்தி செய்தல் போன்ற விடயங்களை மேம்படுத்துவதற்கு செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.