அபிவிருத்தி விசேட சட்டமூலம், மத்திய மாகாணத்திலும் தோல்வி…

மத்திய மாகாணத்தில், இன்று விவாதத்துக்கு எடுத்துகொள்ளபட்ட அபிவிருத்தி(விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், தோல்வியடைந்துள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பில் மத்திய மாகாண சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது 32 பெரும்பான்மை வாக்குகளால் குறித்த சட்ட மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சட்டமூலம் தென்மாகாண சபையிலும் சப்ரகமுவ மாகாண சபையிலும் நேற்றைய தினம் நிராகரிக்கப்பட்டது.

ஏற்கனவே ஊவா, வட மத்திய மற்றும் வட மாகாண சபைகள் இந்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.