அண்மையில் பாஜக கட்சியில் இணைந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ சென்றுள்ளார்.
ஆனால் அங்கிருந்த பொலிசார் அவரை தடுத்து நிறுத்தி வாசலோடு அனுப்பிவிட்டனர்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதனால் பல்வேறு தலைவர்களும், தொண்டர்களும் அப்பல்லோவுக்கு வருகை தந்தபடி உள்ளனர்.
இந்நிலையில் பிரபல கொமடி நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசன் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ சென்றுள்ளார்.
ஆனால் உங்களை எல்லாம் உள்ளே விட முடியாது என்று அவருக்கு அனுமதி மறுத்த பொலிசார் அவரை திருப்பி அனுப்பிவிட்டனர்.