ரன்பீரின் அப்பாவும் மாஜி ஹீரோவுமான ரிஷி கபூரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் அப்பாவின் விருப்பத்துக்காக அலியா பட்டை விரைவிலே ரன்பீர் கபூர் திருமணம் செய்துகொள்வார் என தகவல்கள் வெளியானது. இது குறித்து ரன்பீர் கபூர் எதுவும் பேசாமல் இருந்தார்.
ரன்பீர் கபூரை தீவிரமாக காதலித்து வருகிறார் அலியா பட்.
சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அலியாவிடம் திருமண செய்தி தொடர்பாக கேட்கப்பட்டது. அப்போது அவர், ‘நாங்கள் இருவரும் காதலிப்பதை மறைக்கவில்லை. திருமணம் செய்யப்போவதை மட்டும் எப்படி மறைப்போம்? இப்போதைக்கு நடித்து கொடுக்க வேண்டிய படங்கள் இருவருக்குமே இருக்கிறது.
அதையெல்லாம் முடித்த பிறகு திருமணம் பற்றி யோசிப்போம்’ என்றார்.